அ - வரிசை அதிவிடயம்
அதிவிடயம் --- ATIVIDAYAM :-- வேறுபெயர் – அதிவிடையம், அத்திரணம், மனக்குறை, மாதிரி ஆங்கிலப் பெயர் – INDIAN ALEES தாவரவியல் பெயர் – ALEONITUM HETEROPHYLLUM இது செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் வேர் குவிந்த வடிவமாக இருக்கும் 1 -1 ½ அங்குலம் நீளம் இருக்கும். கணம் ¼ அங்குலம் இருக்கும். இது சாம்பல் பூத்த நிறமும் கருப்பு புள்ளிகளையும் உடையது. வாசனையற்றது எளிதில் பொடியாகும். இதன் உட் பாகம் வெண்மையாக இருக்கும். பயன் பாடு – வேர் சுவை – கைப்பு , வீரியம் – வெப்பு , பிரிவு – கார்ப்பு செயல் – பசித்தூண்டி --------- STOMACHIC துவர்ப்பி --------------- ASTRINGENT வெப்பகற்றி ---------- FOBRIFUGE காமம் பெருக்கி --- APHRODISIAC ...