அ வரிசை அசோகு
அசோகு – ASOKA :--- இது நம் இந்திய மருத்துவத்தில் பயன்படும் பெண்களுக்கான மருந்துகளில் ஒன்று இது ஆங்கிலத்தில் ASOKA TREE , என்றும்தாவர இயல் பொதுப் பெயராக - SARACA INDICA என்றும் வழங்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கஞ்சம், விசாகப் பட்டினம், முதலிய இடங்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப் படுகிறது. சில இடங்களில் வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் பூ ஒரு பூங்கொத்து போலிருப்பதுடன், மனத்தைக் கவரும் படியான நிறமுள்ளதாக இருக்கும். இது மாசி,பங்குனி மாதங்களில் புட்பிக்கும். இதை தமிழகத்தில் பிண்டி,செயலை, என்றும் வழங்குவர். திருமுருகாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில் பல இடங்களிலும் அசோகத்தின் செந்தளிர்கள் விவரிக்கப்பட்டுள்ளது. செந்தளிர் உடையதால் செயலை என்று பெயர் பெற்றுள்ளது. இது அழகான பசுமையான இலைகளைக் கொண்ட சிறு மரம் இதன் இலைகள் இறகு வடிவககூட்டு இலை. ஒவ்வொரு இலையும் நான்கு சிற்றிலைகளைக் கொண்டது. சிற்றிலைகள் நீள் சதுர ஈட்டி வடிவமானவை. ஆறு முதல் ஒன்பது அங்குல நீளமுடையது. மலர்கள் கூட்டு சமதள மஞ்சரியாகக் காணப்படுகிறது. நறுமண...