Posts

Showing posts from March 28, 2022

அ -- வரிசை அந்தரத் தாமரை

Image
  அந்தரத் தாமரை --- ANTARA TAMARAI வேறு பெயர் --- ஆகாசத் தாமரை ஆங்கிலப் பெயர் --- thewester – lettuce தாவரவியல் பெயர் --- pistia stratiotes – linn இது நீர் பாங்குள்ள குளம் குட்டை ஓடை முதலிய நீர் பரப்பில் மிதக்கும் செடி மருத்துவ குணம் – இலை, வேர் சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – இலை – குளிர்ச்சியுண்டாக்கி – REFRIGERANT                  உள்ளழாற்றி ------------- DEMULCENT                  மலமிளக்கி --------------- LAXHTIVE           வேர் – வரட்ச்சியகற்றி -------- EMOLLIENT   குணம் – அழுகிரந்தி, குட்டம், கரப்பான், மார்புக்குள்,கட்டுகின்ற கிருமிக் கூடு, ஆகிய இவைகள் போம். மேலும் நீர்ச் சுருக்கு, மூலம், சீத பேதி, பொடி அல்லது வறட்டு இருமல், தாபிதம் இவைகளும் இதனால் நீங்கும். பாடல் –      ...

அ -- வரிசை அத்தி

Image
  அ த்தி – Atti வேறுபெயர் – அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம். Ficus Glomerata, Roxb. Or (Ficus Racemosa, wall) English – country fig Telungku – Atti, Malayalayam – Atti, Kanadam –Atti, Sanskirit – Udumbara இது மரவகுப்பைச் சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் பயிராகின்றது. மரத்தின் மேற்பட்டை வெளுத்தும், பிளவுபட்டும், சுரசுரப்பாய் இருக்கும். அடி மரமுதல் உச்சிக் கிளைகள் மட்டும் மரத்தை ஒட்டிக் காய்காய்க்கும். இதன் பூவைக் காண்பது மிக அரிது. இதனாலேயே நீண்ட காலஞ் சென்று கானப்பட்ட நண்பனை நோக்கி அடேயப்பா உன்னை அத்தி பூத்தது போலக் கண்டேன் என்று கூறும் வழக்கிருக்கிறது. இதன் காய் உருண்டையாயும் பச்சை நிறமாயும் வழுவழுப்பாயும் மேல் பாகம் மினுமினுப்புடன் பட்டுப் போன்ற மெல்லிய சுனையுடன் இருக்கும். மேலும் காயின் அடிப்புறத்தில் சிறிது குவிந்து மத்தியில் ஒரு சிறு துவாரமும் அதைச் சுற்றி செந்நிறக் கோடுகள் இருக்கும். பழுத்தவுடன் செங்கல் நிறமாக மாறும் அதனுள் சிறு விதைகளும் பூச்சிகளும் அடங்கி இருக்கும். தென்னிந்தியாவில் இதன் பிஞ்சையும்,காயையும் அவித்து உண்பது வழக்கம். மருந்து உண்ணுங்கால...