Posts

Showing posts from March 9, 2022

அ -- அவரிசை அக்ரோட்டு

Image
  அக்ரோட்டு – AKRO ௧௨ TTU Juglans Regia English – Walnut Telungu – Akrotu, Malayalam – Akrotu, Kannadam – Akrodu, Sanskirit – Akshotas. இது மரவகுப்பைச் சேர்ந்தது.இமயமலையில் தன்னிச்சையாகப் விளைகிறது. காஷ்மீர், திபேத், ஆப்கானிஸ்தான் இவ்விடங்களில் பயிரிடப்பட்டும் வருகிறது. மருத்துவ உபயோகப்பகுதி – இலை, காய், பழம், பழத்தோல், பட்டை, விதை. செயல் உடல் தேற்றி – Alterative துவர்ப்பி – Astringent உரமாக்கி -- Tonic   இலை ஒரு பங்கு இலைக்கு பன்னிரண்டு பங்கு நீர்சேர்த்துக் காய்ச்சி நாலில் ஒன்றாகக் குறுக்கிக் கொடுக்க கண்டமாலை, எலும்புருக்கி, வெள்ளை குசுமரோகம், குணப்படும். புண் புரைகளைக் கழுவ இக் கசாயத்தை பயன்படுத்தலாம். அவைகள் ஆறும். காய் செயல் புழுவகற்றி – Vemifuge மருத்துவகுணம் – குழந்தைகளின் வயிற்றில் சேரும் பூச்சிகளைக் கொன்று வெளிப்படுத்த, கையைத் தின்ன கொடுக்கலாம். பழமும் – பருப்பும் சுவை – பழம் – பருப்பு – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு செயல் உடல் தேற்றி – Alterative காமம் பெருக்கி – Aphrodisiac குணம் – உடலுக்கு பலந்தரும், இதை உண...