Posts

Showing posts from May 23, 2022

அ -- வரிசை அரசமரம்

Image
  அரசு – ARASU வேறு பெயர் – அச்சுவத்தம், அஸ்வத்தம், திருமரம், சுவாலை, போதி பனை,கனவாம், சராசனம், பிப்பிலம் . ஆங்கிலப் பெயர் – THE PEEPUL TREE, SACRED FIG தாவரவியல் பெயர் – FICUS RELIGIOSA LINN இது இந்தியாவில் எங்கும் சாதாரணமாய்ப் பயிராகிற பெருமரங்களுள் ஒன்று. ஆணி முதல் ஆவணித் திங்கள் வரையில் பூக்கும். பிராமணர்களால் இம்மரம் தெய்வத் தன்மை உடையதென நம்பப்படுகிறது. இதனால் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகாமையிலும் வைத்து பயிர் செய்யப்படுகிறது. மருத்துவ பகுதி – இலை, வித்து, பட்டை, வேர் . சுவை – துவர்ப்பு, கைப்பு உள்ளது , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு செயல் – வித்து – மலமிளக்கி – LAXATIVE இலை, வேர், பட்டை –துவர்ப்பி –   ASTRINGENT   குணம் – இளைக் கொழுந்து, தாதுவை விருத்தி செய்யும், சுரத்தையும் முத்தோட கோபத்தையும் போக்கும். வித்து – சுக்கில நோய், குறள் வரட்சி, தாகம், இவற்றை நீக்கும் மரப்பட்டை, வேர்ப்பட்டை – புண்களை ஆற்றும் பாடல் – அரசம்வேர் மேல்விரணம் ஆற்றும் வித்து வெருவ்வரும் சுக்கில நோய் விட்டும் – குரல்விறல்வி தாகமொழிக் குங் கொழு...

அ -- வரிசை அம்மான் பச்சரிசி

Image
அம்மான் பச்சரிசி – AMMAN – PACHCHARISI   வேறுபெயர் – சித்திரப் பாலாடை ஆங்கிலப் பெயர் – AUSTRALIAN ASTHUMA WEED தாவரவியல் பெயர் – EUPHORBIA  PLULIFERA , EUPHORBIA HIRATA , EUPHORBIA PAVIFLORA இது சிறு கொடி வகுப்பைச் சேர்ந்தது எனினும், இச்சாதியில் சில செடிவகையில் குத்துச்செடி போல் உள்ளதும் இருக்கிறது. இது வயல் வெளிகளில் ஏராளாமாய் கிடைக்கும். இது வருடாந்திரப் பயிர்களில் ஒன்று, வருடம் முற்றும் பூக்கும் பூமியுடன் ஓட்டிப் படர்கின்ற வகுப்பில் வெண்ணிறம், செந்நிறம் உள்ளது பூமிக்குமேல் சிறு பூண்டைப் போல் வளர்வதிலும் மேற்கண்ட நிறங்கள் உண்டு. இருப்பினும் சுவையிலும் செய்கையிலும், குணத்திலும் மிக்க ஒற்றுமை உண்டு. சுவை – துவர்ப்பு, இனிப்பு , வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு         செயல் – குளிர்ச்சி உண்டாக்கி ---- REFIRIJERANT                  மலமிளக்கி --------------------- LAXATIVE    ...