அ -- வரிசை அரசமரம்
அரசு – ARASU
வேறு பெயர் – அச்சுவத்தம், அஸ்வத்தம், திருமரம், சுவாலை, போதி
பனை,கனவாம், சராசனம், பிப்பிலம்.
ஆங்கிலப் பெயர் – THE PEEPUL
TREE, SACRED FIG
தாவரவியல் பெயர் – FICUS
RELIGIOSA LINN
இது
இந்தியாவில் எங்கும் சாதாரணமாய்ப் பயிராகிற பெருமரங்களுள் ஒன்று. ஆணி முதல் ஆவணித்
திங்கள் வரையில் பூக்கும். பிராமணர்களால் இம்மரம் தெய்வத் தன்மை உடையதென
நம்பப்படுகிறது. இதனால் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகாமையிலும் வைத்து பயிர்
செய்யப்படுகிறது.
மருத்துவ
பகுதி – இலை, வித்து, பட்டை, வேர்.
சுவை
– துவர்ப்பு, கைப்பு உள்ளது, வீரியம்
– சீதம், பிரிவு
– இனிப்பு
செயல்
– வித்து – மலமிளக்கி – LAXATIVE
இலை,
வேர், பட்டை –துவர்ப்பி – ASTRINGENT
குணம் –
இளைக் கொழுந்து, தாதுவை விருத்தி செய்யும், சுரத்தையும் முத்தோட கோபத்தையும்
போக்கும்.
வித்து
– சுக்கில நோய், குறள் வரட்சி, தாகம், இவற்றை நீக்கும்
மரப்பட்டை,
வேர்ப்பட்டை – புண்களை ஆற்றும்
பாடல்
–
அரசம்வேர் மேல்விரணம் ஆற்றும் வித்து
வெருவ்வரும் சுக்கில நோய் விட்டும் – குரல்விறல்வி
தாகமொழிக் குங் கொழுந்து தாதுதரும் வெப்பகற்றும்
வேக முத்தோடம் போக்கும் மெய்
---- அகத்தியர் குணவாகடம்
இலைக்
கொழுந்தைப் பாலில் அரைத்து சருக்கரை சேர்த்து உன்ன சுரம் முப்பினிக் கோபம்
தணியும், தாது விருத்தியையும் வித்தைத் தக்க அளவில் சூரணஞ் செய்து உட் கொண்டுவர மலச்சிக்கல்
சுக்ல நோய் குரல் வரட்சி தாகம் தீரும்
சீரனசக்தி அதிகரிக்கும்.
பட்டையை
இடித்துப் பொடியாக்கிக் கருக்கிய சாம்பலில் கொஞ்சம் எடுத்து நீரில் ஊறவைத்து
வடிகட்டிக் கொடுக்க விக்கல் சாந்தமாகும்.
படை தூளில்
கால் முதல் அரைப் பலம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும்
வெப்பகலும். பட்டையின் நுண்ணிய துகளை புண்ணின் மீது தூவிவர புண் ஆரிவரும்.
ஐந்து
துவர்ப்பு பொருள்களில் அரசும் ஒன்று ஆகையால் இவ் ஐந்து பட்டைகளின் குடிநீர்
வாய்புண்ணுக்குக் கொப்பளிக்கும் நீராகவும் சீமேகத்தில் ( வெள்ளை ) நிர்த்தாரையில்
செலுத்திக் கழுவும் நீராகவும் உபயோகிக்கலாம்.
கீழ்க்கண்ட
தைலத்தைத் தடவிவர சொறி சிரங்க்குகளை குணமாக்கும். –
நன்னாரி வேர்,
மஞ்சள், பஞ்ச துவர்ப்பு ( அத்தி, இத்தி, ஆல்,நாவல், அரசு ) பட்டைகளை சம அளவு
எடுத்து குடிநீர் விதிப்படி சுருக்கிய நீர் படி – 1 நல்லெண்ணெய்
படி – 1 அதிமதுரம்,
சன்ன லவங்கப்பட்டை, வெட்டிவேர், கோட்டம், சந்தனம்,வகைக்கு கால் பலம் எடுத்து
பசுவின் பால் விட்டு அரைத்து மேற்படி குடி நீரில் கலக்கி எரித்து பக்குவத்தில்
வடித்து தைலத்தை எடுத்துக் கொள்ளவும்.
இம் மரத்தை
குத்தினால் வடியும் பாலை பித்த
வெடிப்புக்கு தடவக் குணமாகும்.

Comments
Post a Comment