அ - வரிசை அகத்திக்கீரை
அகத்திக்கீரை – AGATTI :--- இதன்
தாவரவியல் பெயர் – Agathigrandi flora
இது அறு சுவைகளின் படி கசப்பு, இனிப்புச்
சுவைகளைக் கொண்டது. இது மருத்துவச் செயலாக நச்சரி – ANTIDOE, குளிர்ச்சியுண்டாக்கி – REFRIGENT, வெப்பகற்றி –
FEBRIFUGE, மலமிளக்கி – LAXATIVE, செரிப்புண்டாக்கி –
DIGESTIVE, என்னும் செய்கை கொண்டது. இதன் விசம் நீக்கும்
தன்மையால் இரத்தத்தில் ஏற்படும் அற்ப குற்றங்களை நீக்கும். இது சித்த மருந்துகள்
உபயோகிக்கும் உணவில் சேர்த்துக் கொன்டால் அதன் வீரியத்தை குறைத்து செயல் இலக்கச்
செய்யும். இது உணவை செரிப்பித்து குளிர்ச்சியை உண்டாக்கும் வாயுவை உண்டாக்கும்.
மருந்திடுதல் போகுங்க்கான் வன்கிரந்தி வாய்வாந்
திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்திக்யினை தின்னும் அவர்க்கு
--- அகத்தியர் குனபாடம்
இக்கீரை இடு மருந்து குற்றங்களையும் அதிகப் படியாகவோ அல்லது சரியாக
சுத்திகரிக்கப் படாமலும் முறையாக செய்யப்படாத பாசான மருந்துகளின் குற்றங்களை முறிக்கும்தன்மை
உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் போது அகத்திக்கீரையை
சாப்பிடவேண்டாம் என்று சொல்லப்படுகிறது. இது மருந்தின் வீரியத்தை குறைப்பதால்
மருந்த்தின் தன்மை குணம் செய்யாது வீண் படும். அது போல் இக்கீரையை தொடர்ந்து
உபயோகிக்கக் கூடாது. பத்து நாட்களுக்கு ஒருமுறையாக சாப்பிட்டுவருவது நலம்
பயக்கும். இது வாயுவையும் கரப்பான் புண்களையும் தொடர்ந்து உன்பாதால் உண்டாகும்
என்று சித்த மருத்துவம் சொல்கிறது.
இக்கீரையின் தனிச் சாற்றை கசக்கி மூக்கில்
இரண்டு துளிவிட நீர்க்கோர்வை, தலைவலி தீரும் இதன் இலையை அரைத்து காயங்களுக்கு
கட்டலாம்.
செவகத்திப் பன்னாஞ்சிலேத்மமதை யுண்டாக்கும்
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம் – கவ்வு
நவநீத பஸ்மத்தை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்
---
அகஸ்தியர்
குணவாகடம்
இதை அதிகம் உணவில் சேர்த்துக் கொன்டால் கபம் அதிகரிக்கும். இதன் இலை, பூ
இரண்டையும் சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .புகையிலையின் தாக்கத்தால்
ஏற்பட்ட குற்றத்தை நீக்கும் பித்த குற்றத்தையும் வெப்பத்தையும் தணிக்கும்.
நாட்டிற் பனிப்பீனும் நாசிக்கறைக் கதழ்வை
யோடித் துடைத்துள் லொளியாரற்றும் – பாடத்
தாவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே !
துவரகத்திப் பூக்காண் டுதி
---- அகத்தியர் குணவாகடம்
பூவின் சாரால் அப்ரேகம் சுத்தியாகும் – தேரையர் கரிசல்
அகத்தி மரப்பட்டை விதிப்படி குடிநீர் (கசாயம்) செய்து அம்மை நோய் சுரம்,
அதிக உஷ்ணத்தை தருகின்ற பித்தசுரங்களில் கொடுக்க மலத்தை இளக்கி வெளியேற்றி
உஷ்ணத்தை குறைக்கும்.
வேர்ப்பட்டைக்கு – துவர்ப்பி – ASTRINGENT , உரமாக்கி – TONIC என்னும் செய்கைகளை உடையது.
நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனும்
சொல்லுத் தாகமறும் ! – மெல்ல மெல்ல
மெய்யறிவு கையெரிவு தேகத்தி னுள் ளெரிவும்
ஐயெரிவும் போமென்றறி
----- அகத்தியர் குணவாகடம்
அகத்தி வேற்பட்டையை முறைப்படி ஊறல் குடிநீராக அல்லது குடிநீராக (கசாயம்)
செய்து சாப்பிட மேகம்,தாகம், கையெரிவு, ஆண்குறி எரிவு, உள் எரிவு, உடல் எரிவு,
ஐம் பொறிகளைச் சார்ந்த எரிவு இவைகளை
குறைக்கும் இதன் வேர்ப்பட்டையும் + ஊமத்தன் வேர்ப்பட்டையும் சம அளவு எடுத்து
நன்றாக அரைத்து மூட்டுகளின் வீக்கங்களுக்கு பற்றுப்போட வற்றும் மற்றும் வேறு
சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட இமெயிலில் தொடர்பு கொள்ளவும்
Comments
Post a Comment