Posts

Showing posts from March 6, 2022

அ - வரிசை அக்கரகாரம்

Image
  அக்கரகாரம் – AKKARA - KARAM வேறுபெயர் – அக்கராகாரம், அக்கிராகாரம் Anacyclus Pyrethrum ( Root of the Anthemis pyrethrum) English – Pellitory of SPAIN; pellitory root; Pyrethi radix Telunku – Akala-karam, Malayalam – Akki-karuka, Kannadam – Akkala-kare, Sanskirit – Akarakaraba இந்த வேர் சற்றேறக்குறைய விரலலவிருக்கும். நிறத்தில் வெண்கறும்மை இதை மென்று சுவைக்க,நாக்கு,உதடு, இவ்விடங்களில் விருவிருப்பையும்,எரிச்சலையும்உண்டாக்கும். வாயில் நீர் ஊரும். வங்காளம்,அரபியா,இவ்விடங்களில் ஏராளமாய் பயிராகும். சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் வெப்பமுண்டக்கி – Stimulant உமில்நீர்ப்பெருக்கி – Sial0gogue தடிப்புண்டாக்கி -- Rubefacient குணம் – இதனால் பயங்கரமான கால்தோடமும் (வாத தோடமும்) தாகசுரமும் நீங்கும். இதை வாயிலடக்கிக் கொள்ள,நாவரட்சி நீங்கி நாக்கில் நீர் ஊறும். அக்கர காரம்அதன்பேர் உரைத்தாக்கால் உக்கிரகாலஅத்தோடம் ஒடுங்காண் – முக்கியமாய்க் கொண்டாக்கால் சலம்ஊறும் கொம்பனையே ! தாகசுரம் கண்டால் பயந்தோடுங் காண். ---- அகத்தியர் குணவாகடம் அக்கர...