அ - வரிசை அக்கரகாரம்
அக்கரகாரம் – AKKARA - KARAM
வேறுபெயர் – அக்கராகாரம், அக்கிராகாரம்
Anacyclus
Pyrethrum
( Root of the
Anthemis pyrethrum)
English –
Pellitory of SPAIN; pellitory root; Pyrethi radix
Telunku –
Akala-karam, Malayalam – Akki-karuka, Kannadam – Akkala-kare, Sanskirit –
Akarakaraba
இந்த வேர் சற்றேறக்குறைய விரலலவிருக்கும். நிறத்தில் வெண்கறும்மை
இதை மென்று சுவைக்க,நாக்கு,உதடு, இவ்விடங்களில் விருவிருப்பையும்,எரிச்சலையும்உண்டாக்கும்.
வாயில் நீர் ஊரும். வங்காளம்,அரபியா,இவ்விடங்களில் ஏராளமாய் பயிராகும்.
சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செயல்
வெப்பமுண்டக்கி – Stimulant
உமில்நீர்ப்பெருக்கி – Sial0gogue
தடிப்புண்டாக்கி -- Rubefacient
குணம் – இதனால் பயங்கரமான
கால்தோடமும் (வாத தோடமும்) தாகசுரமும் நீங்கும். இதை வாயிலடக்கிக் கொள்ள,நாவரட்சி
நீங்கி நாக்கில் நீர் ஊறும்.
அக்கர காரம்அதன்பேர்
உரைத்தாக்கால்
உக்கிரகாலஅத்தோடம்
ஒடுங்காண் – முக்கியமாய்க்
கொண்டாக்கால் சலம்ஊறும்
கொம்பனையே ! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்.
---- அகத்தியர் குணவாகடம்
அக்கராக் காரஞ் செய்யு
மடவிது தன்னைக் கேளாய்
விக்கலுந் தடிப்பு மாற்றும்
மிடறுகள் பாடி விக்குங்
கக்குமா ரோசிக கங்க ளடினவ
தோஷம் போகும்
இப்படிக் கொள்வ தற்கு
யிதமுடன் சொன்னா ரிதே
அக்கிரா காரத்தை ஆரறியப்
போறார்காண்
உக்கிரகா லத்தோஷ மோடுமே –
திக்குமொழி
கொண்டாற்கு நாத்திரும்பும்
கொம்பனையே ! கேளீர்
கண்டார்க்குத் தோடமிலை காண்
----- ஏடு
அன்றியும்,பல்வலி,
உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் நாக்கு அசைவற்றுப் போதல், (ஜிக்வாஸ் தம்பனம்)
கீல்வாதம், சந்நிதோடம் இவைகளும் நீங்கும்.
பல்வலி,
உண்ணாக்கு வளர்ச்சி தொண்டைக் கம்மல், நாவசைவற்றுப் போதல் சுரத்தில் உண்டாகும்
வரட்சி ஆகியவைகள் ஒரு சிறிய அக்கரகாரத்துண்டை வாயிலிட்டு மென்று வருவதாலும் அக்கிர
காரத்தை ஊறல் கஷாயஞ் செய்து வாய் கொப்பளித்து வருவதால் நீங்கும்.
இதன் தனிச்
சூரணத்தை மூக்கில், நசியம் செய்ய கால்கை வலிப்பு சாந்தப்படும்.
அக்கரகாரம்,சுக்கு,
திப்பிலி, செஞ்சந்தனம், கிராம்பு, சாதிக்காய், குங்குமப்பூ, இவைகளின் பொடி வகைக்கு
ஒரு பங்கு அபின் அரைப்பங்கு இவைகள் எல்லாம் சேர்ந்த எடைக்கு அரைப்பங்கு சர்க்கரை
கலந்து 1 – 3 gm அளவு காலை மாலை உட்கொள்ள வயிற்று நோய் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
கண்டெளதம்
அக்கரகாரம், அதிமதுரம், சிற்றரத்தை சுக்கு இவைகளின் தனிச் சூரணம் சமனெடை
எடுத்துக் கொண்டு பசுவின் பாலில் அரைத்து எடுத்த விழுது ஒரு பங்கு பாலில்
வேகவிட்டு அரைத்து எடுத்த பேரீச்சம் பழம் நான்கு பங்கு கலந்து தேன் தேவையான அளவு
விட்டு கலந்து நாக்கில் தடவி வர சுரம், சன்னி யில் உண்டாகும் நாக்கு வறட்சி நீங்கி
நாவில் நீர் சுரக்கும், வாந்தியிருந்த்தால் மயிலிறகைச் சுட்ட சாம்பலும், மலபந்தம்
இருந்தால் கடுக்காய்த் தோலையும், மலப்போக்கிருந்தால் மாசிக்காயையும்,
நீர்கட்டியிருந்தால் வெங்காரத்தையும் சேர்க்கலாம். மேற்படி யோகத்தில் பொன், வெள்ளி,
நன்முத்து, நற்பவளம், கலைக்கோடு, அக்கமணி (உருத்திராக்கம்) கத்தூரி, குங்குமப்பூ
இவைகளையுஞ் சேர்ந்து வழங்குவதுண்டு.
Comments
Post a Comment