Posts

Showing posts from March 8, 2022

அ - வரிசை அக்காரப்பட்டை

Image
  அக்காரப்பட்டை – AKKARAPPATTAI சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் பசிதூண்டி – Stomachie வெப்பமுண்டாக்கி – Stimulant உமிழ்நீர் பெருக்கி – Sialagogue தடிப்புண்டாக்கி – Rubefacient உடல்தேற்றி – Alterative. குணம் அக்காரப்பட்டைக்கு தாகம், நாவறட்சி, சுரம், சந்நிபாதம், திரிதோஷ தலை நோய்,வாதகோபம், உதிரநாற்றம் நீங்கும். அக்காரப் பட்டைக்கு கறலநா வறட்சிகளும் எக்குசந்நி பாதசுரம் என்பவையும் – பக்கச் சகலதலை நோய்வாய்வுந் தாழ்ந்தே யொழியும் புகலிரத்த கந்தமது போம். ---- அகத்தியர் குணவாகடம் அக்காரப் பட்டையைச் சூரணஞ் செய்து நாளொன்றுக்கு இருவேளையும் வேளை ஒன்றுக்கு 1 – 2 gm சூரணத்துடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துண்டு வர மேற்கண்ட நோய்கள் நீங்கும் அல்லது 8 gm எடுத்து குடிநீர் செய்து கொடுக்கலாம். *******