அ - வரிசை அக்காரப்பட்டை
அக்காரப்பட்டை – AKKARAPPATTAI
சுவை – கார்ப்பு, வீரியம் –
வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செயல்
பசிதூண்டி – Stomachie
வெப்பமுண்டாக்கி – Stimulant
உமிழ்நீர் பெருக்கி – Sialagogue
தடிப்புண்டாக்கி – Rubefacient
உடல்தேற்றி – Alterative.
குணம்
அக்காரப்பட்டைக்கு தாகம், நாவறட்சி,
சுரம், சந்நிபாதம், திரிதோஷ தலை நோய்,வாதகோபம், உதிரநாற்றம் நீங்கும்.
அக்காரப் பட்டைக்கு கறலநா
வறட்சிகளும்
எக்குசந்நி பாதசுரம் என்பவையும் –
பக்கச்
சகலதலை நோய்வாய்வுந் தாழ்ந்தே யொழியும்
புகலிரத்த கந்தமது போம்.
---- அகத்தியர் குணவாகடம்
அக்காரப் பட்டையைச் சூரணஞ் செய்து நாளொன்றுக்கு
இருவேளையும் வேளை ஒன்றுக்கு 1 – 2 gm சூரணத்துடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துண்டு
வர மேற்கண்ட நோய்கள் நீங்கும் அல்லது 8 gm எடுத்து
குடிநீர் செய்து கொடுக்கலாம்.
*******
Comments
Post a Comment