அ -- வரிசை அருநெல்லி
அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் – AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC விதை – மலமிளக்கி – LAXATIVE காய் – பித்தசமணி – ANTIBILIOUS மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும் மருத்துவர் பால் துரிசை மாற...