Posts

Showing posts from June 10, 2024

அ - வரிசை அவரை

Image
  அ வரை – AVARAI வேறு பெயர் – சிம்பை, சிக்கடி, நிட்பாவம், நிஷ்பவம் . தாவரவியல் பெயர் --- DOLICHOS LABLAB, LINN   இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. தெனிந்தியாவில் சாதாரணமாய் வீடுகள் தோறும் பயிரிடப்படுகிறது ஆடி மாதத்தில் விதை நடப்படும் ஆறு மாதப் பயிர். இந்த அவரைக் குடும்பத்தில் பல வகை உண்டு அவை – 1.         சீனியவரை --- DOLICHOS FABOFORMIS 2.         செவ்வரை ------ ) DOLICHOS LABEAB ( WITH RED FLOWERS   3.         நகரவரை ------ DOLICHOS RUGOSUS NOB 4.         வெள்ளை அவரை – DOLICHOS LABLAB ( WITH WHITE   FLOWERA ) மருத்துவ பகுதி – இலை, பிஞ்சு, காய் இலை – சுவை – துவர்ப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – இனிப்பு செயல் – அகட்டுவாய் வகற்றி – CARMINETIVE                       துவர்ப்பி ---- ASTRIN...

அ - வரிசை அல்லி

Image
அல்லி – ALLI வேறு பெயர் – ஆம்பல், குமுதம், கைரவம் ஆங்கிலப் பெயர்   – THE WATER LILLY (WHITE) தாவரவியல் பெயர் – NYMPHOEA          இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பிற் சேர்ந்தது. வெண்மை, செமை, வெண்மையும் செம்மையும் கலந்த நிறங்கள் உள்ள பூக்களை பூக்கும் வகைகள் உண்டு. குளிர் காலத்திலும், மழை காலத்திலும் இது ஏராளமாய் பூக்கும். மருத்துவப் பகுதி – பூ, கொடி, இலை, கிழங்கு, காய் சுவை – சிறு துவர்ப்பு , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு செயல் – வரட்ச்சியகற்றி – EMOLLIENT குணம் – அல்லி பூ நிறத்தால் மூன்று வகைப் படினும் குணத்தில் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். வெள்ளல்லியின் பூ குணம் – இதனால் மேகம் ஆண்குறித் தூவார விரணம், நீரழிவு, தாகம், உட் சூடு ஆகிய இவைகள் விலகும். பாடல் – மேகம் அரும் புண் ஆறும் விட்டேகும் நீரழிவு தாகம் தணியும் தழல் அகலும் – வாகான மெல்லியலே ! ஆயில் மறை வேதியரெல்லாம் உரைக்கும் அல்லிமலரால் அறி             ...