Posts

Showing posts from May 11, 2022

அ -- வரிசை அமுக்குரா

Image
அமுக்கரா என்னும் அஸ்வகந்தா :---        இது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. நம் சித்த மருத்துவத்தில் தமிழக வழக்குப்படி அமுக்குரா என்றும், சம்ஸ்கிருத மொழி வழக்குப்படி அஸ்வகந்தா என்றும், ஆங்கிலத்தில் விண்டர் செரி ( winter cherry )  என்றும் தாவர இயல் பெயராக விதானியா சோமணி பிரா   withania somnifera என்றும் வழங்கப் படுகிறது.        இது இந்தியாவின் மேட்டுப்பாங்கான இடங்களில் பெலுச்சிஸ்தானத்திலும் பயிராகும்  செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பழம் செந்நிறமாய் இருக்கும். இச்செடி சாம்பல் நிறமுடையதாக இருக்கும்.        இதன் – இலை – வேர் (கிழங்கு) எல்லாம் மருத்துவ உபயோகத்திற்கு ஏற்றது. இது சித்த மருத்துவ மரபுப்படி அறுசுவைகளின் படி கசப்பு – வெப்பம் – காரம் என்னும் தன்மை களைக் கொண்டது. இதன் கிழங்கு மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இக் கிழங்கு கசப்பு, வெப்பம், கார்ப்பு என்னும் அடிப்படையில் உடற் தேற்றி என்னும் செயலி படி உடலில் உண்டாகிற நோய்களை நீக்கி நல்ல நில...