அ - வரிசை அகில்
அகில் – AGIL வேறு பெயர் – அகரு, (அகருக்கட்டை ) அகில்கட்டை, பூழில், காகதுண்டம், Aquileia agallochi or A. Ovata English – Aloe wood, Eagle wood, Sweet scented wood Tel – Agaru, Malayaalam – Agaru, Kannatam – Agar (Krishna), Sanskirit – Agaru இது மரவகுப்பில் சேர்ந்தது, இமயத்தின் கீல்பிரதேசம், அசாம், பூட்டான், முதலிய இடங்களில் உற்பத்தியாகின்றது. உபயோக பகுதி – கட்டை, பிசின் சுவை – கரப்பு, கசப்பு, லேசான இனிப்பு, வீரிய – வெப்பம், பிரிவு – இனிப்பு, செயல் ----- வெப்பமுண்டாக்கி – stimulant பித்தநீர் பெருக்கி – cholagogue வீக்கமுருக்கி – Deobstruent குணம் – அகருகட்டையினால் பீனிசம், தலைக்குத்து, (ஒற்றை தலைவலி) வாதம் நமைப்பு படைகள், சிலவகை சுரம், வாந்தி அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும் வயதானவர்களின் தரந்த உடலை பலப்படுத்தும் நாசி யடைப்பு நவிரவிடி தாலுநோய் வீசுநமைப் புடைகள் விட்டேகும் – பேசில் சுகரு மயங்குந் துனைமுலையாய் ! நல்ல அகரு மரத்தா லறி தளர்ந்தவி ருத்தருக்காந் தக்க மணத்தால் உளைந்த சுரமனைத்து மோடும் – வளந்...