அ - வரிசை அகில்

 



அகில் – AGIL

வேறு பெயர் – அகரு, (அகருக்கட்டை ) அகில்கட்டை, பூழில்,     காகதுண்டம்,

Aquileia agallochi or A. Ovata

English – Aloe wood, Eagle wood, Sweet scented wood

Tel – Agaru, Malayaalam – Agaru, Kannatam – Agar (Krishna), Sanskirit – Agaru

இது மரவகுப்பில் சேர்ந்தது, இமயத்தின் கீல்பிரதேசம், அசாம், பூட்டான், முதலிய இடங்களில் உற்பத்தியாகின்றது.

உபயோக பகுதி – கட்டை, பிசின்

சுவை – கரப்பு, கசப்பு, லேசான இனிப்பு,

வீரிய – வெப்பம், பிரிவு – இனிப்பு,

செயல் -----

வெப்பமுண்டாக்கி – stimulant

பித்தநீர் பெருக்கி – cholagogue

வீக்கமுருக்கி – Deobstruent

குணம் –

அகருகட்டையினால் பீனிசம், தலைக்குத்து, (ஒற்றை தலைவலி) வாதம் நமைப்பு படைகள், சிலவகை சுரம், வாந்தி அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும்

வயதானவர்களின் தரந்த உடலை பலப்படுத்தும்

நாசி யடைப்பு  நவிரவிடி தாலுநோய்

வீசுநமைப் புடைகள் விட்டேகும் – பேசில்

சுகரு மயங்குந் துனைமுலையாய் ! நல்ல

அகரு மரத்தா லறி

தளர்ந்தவி  ருத்தருக்காந் தக்க மணத்தால்

உளைந்த சுரமனைத்து மோடும் – வளந்திகலு

மானே ! அகிர்புகைக்கு வாந்திய ரோசிகம்போம்

தானே தளர்ச்சியரறுஞ் சாற்று.

அகில்கட்டையை நீர்விட்டு சந்தனம் போலரைத்து உடலில் பூசிக்கொண்டு வர வயதானவர்களின் தளர்ந்த தேகம் இருகும்.

இதன் வாசனையால் வருத்துகின்ற சிற்சில சுரவெப்பம் நீங்கும் இக்கதையைப் புகைத்து ஆக்ரானிக்க அல்லது இக்கட்டையின் புகை மேல்படும் படி செய்ய அயர்ச்சி வாந்தி அரோசகம் தீரும் புண்களுக்கு புகையைக் காட்ட விரைவில் குனம்மாகும்

இக்கட்டையின் சூரணம் தாதுவிருத்தி மருந்துகளில் சேரும்.

அகில் கட்டைத் தயிலம் முடித்தயிலாமாக சேர்க்க நீர்க்கோவை, மேகம் பீநீசம், முதலிய மேற்கண்ட நோய்கள் தீரும்  

 

அகில் கட்டைத் தைலம்

செய்முறை  --

அகில் கட்டையை நையச் சிதைத்து ஓர் பங்குக்கு எட்டுப் பங்கு நீர் விட்டு ஒரு பங்காக சுண்டவைத்து இது ஒரு லிட்டர் என்றால்  நல்லெண்ணெய் ஒரு லிட்டர், பசும் பால் ஒரு லிட்டர் ஒன்று கூட்டி இதில் அதிமதுரம் தான்றிக்காய் தோல் வகைக்கு 25 gm பால் விட்டரைத்து எல்லாம் ஒன்றாய் கலந்து எரித்து பதத்தில் இறக்கி வடிக்கட்டி எடுத்துக் கொண்டு தலை குளித்துவர மேல் கண்ட நோயிகள் தீரும்

குறிப்பு –

சிலர் அகில் கட்டை சிவந்த நிறத்தை உடையாதாய் எண்ணுவது உண்டு. இந்த இனத்தில் சிகப்பு சிரத்தஈ உடைய அகிலுக்கு (Csdrela toona) செவ்வகில் என்றும வெண்மை நிறத்தை உடைய அகிலுக்கு (Dysoxylum Malabaricum)  வெள்ளை அகில் என்றும், கருஞ்சாயல்  உடைய அகிலுக்கு  (Aquilaria Agallocha) அகரு என்றும் வழக்கத்தின் படி வந்திருக்கின்றது.

இது மட்டும் அல்லாமல்  நெடுநாள் சென்ற கள்ளி மரத்தின் நடுவில் வைரம் பாய்ந்து சிவந்து இருக்கும் பாகத்தை அகில் என்றும் ஏற்றுக் கொள்வர் இது அதிக நறுமணத்தை உடையதாக இருக்கும்,

“ கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்; மான்வயிற்றில்

ஒள்அறி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்கும் குடி.

என்று முன்னோர்  கூறி உள்ளனர்        

 

 

 

 

Comments

Popular posts from this blog

அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

அ - வரிசை அகத்திக்கீரை

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை