Posts

மூலிகை தொகுப்பு

அ - வரிசை அவரை

Image
  அ வரை – AVARAI வேறு பெயர் – சிம்பை, சிக்கடி, நிட்பாவம், நிஷ்பவம் . தாவரவியல் பெயர் --- DOLICHOS LABLAB, LINN   இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. தெனிந்தியாவில் சாதாரணமாய் வீடுகள் தோறும் பயிரிடப்படுகிறது ஆடி மாதத்தில் விதை நடப்படும் ஆறு மாதப் பயிர். இந்த அவரைக் குடும்பத்தில் பல வகை உண்டு அவை – 1.         சீனியவரை --- DOLICHOS FABOFORMIS 2.         செவ்வரை ------ ) DOLICHOS LABEAB ( WITH RED FLOWERS   3.         நகரவரை ------ DOLICHOS RUGOSUS NOB 4.         வெள்ளை அவரை – DOLICHOS LABLAB ( WITH WHITE   FLOWERA ) மருத்துவ பகுதி – இலை, பிஞ்சு, காய் இலை – சுவை – துவர்ப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – இனிப்பு செயல் – அகட்டுவாய் வகற்றி – CARMINETIVE                       துவர்ப்பி ---- ASTRIN...

அ - வரிசை அல்லி

Image
அல்லி – ALLI வேறு பெயர் – ஆம்பல், குமுதம், கைரவம் ஆங்கிலப் பெயர்   – THE WATER LILLY (WHITE) தாவரவியல் பெயர் – NYMPHOEA          இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பிற் சேர்ந்தது. வெண்மை, செமை, வெண்மையும் செம்மையும் கலந்த நிறங்கள் உள்ள பூக்களை பூக்கும் வகைகள் உண்டு. குளிர் காலத்திலும், மழை காலத்திலும் இது ஏராளமாய் பூக்கும். மருத்துவப் பகுதி – பூ, கொடி, இலை, கிழங்கு, காய் சுவை – சிறு துவர்ப்பு , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு செயல் – வரட்ச்சியகற்றி – EMOLLIENT குணம் – அல்லி பூ நிறத்தால் மூன்று வகைப் படினும் குணத்தில் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். வெள்ளல்லியின் பூ குணம் – இதனால் மேகம் ஆண்குறித் தூவார விரணம், நீரழிவு, தாகம், உட் சூடு ஆகிய இவைகள் விலகும். பாடல் – மேகம் அரும் புண் ஆறும் விட்டேகும் நீரழிவு தாகம் தணியும் தழல் அகலும் – வாகான மெல்லியலே ! ஆயில் மறை வேதியரெல்லாம் உரைக்கும் அல்லிமலரால் அறி             ...

அ - வரிசை அலரி

Image
  அலரி – ALARI வேறு பெயர் – கத்துரிப்பட்டை , கனவீரம் , கரவீரம் , கவிரம் . ஆங்கிலப் பெயர் – THE OLEANDER தாவரவியல் பெயர் – NERIUM O DORUM SOLAND          இது செடி வகுப்பில் சேர்ந்தது . வட இந்தியாவிற்குரிய தாக கருதப்பட்டாலும் , தெனிந்தியாவிலும் , தோட்டங்களிலும் ஏராளமாய்க் காணலாம் . இதில் வெண்மை , செம்மை , அழுக்கு மஞ்சள் நிறமுள்ள பூக்களை பூக்கும் வகைகளும் உண்டு , வெண்ணிற பூ உள்ள செடி வெள்அலரி என்றும் மஞ்சள் நிறப் பூ உள்ளது மஞ்சள் அலரி என்றும் வழங்கப்படும் . செந்நிறப் புட்பம் உள்ளது தன்னுள் செவ்அலரி , குங்கம அலரி என இருவகையும் பெற்றிருக்கிறது .          ஒவ்வொரு வகையிலும் ஓரடுக்கு முதல் பல அடுக்கு இதழுள்ள பூக்கள் உண்டு . குணத்திலும் , சுவையிலும் , செய்கையிலும் சற்றேறக் குறைய ஒன்றாகவே இருக்கும் . வருட முற்றும் பூக்கும் . மருத்துவ பகுதி – பூ , வேர்பட்டை சுவை – கைப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – வாந்தியுண்டாக்கி – EMETIC       ...

அ - வரிசை அருநெல்லி

Image
  அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் –   AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC          விதை – மலமிளக்கி – LAXATIVE          காய் – பித்தசமணி – ANTIBILIOUS   மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து   மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும்   மருத்துவர் பால் துரிசை மாற...

அ - வரிசை அழிசி விதை

Image
அலிசி விரை – ALISHI VIRAI ஆங்கிலப் பெயர் – LINSEED – SEEDS OF தாவரவியல் பெயர் – LINUM USITATISSIUM குறிப்பு --- அலிசி விதையும் ஆளிவிதையும் ஒன்றென்று சிலர் கருதியுள்ளார்கள் இது தவறான கருத்து. அலிசி இது இந்தியாவிலும், சிலோன், இமயமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் பயிராகின்றது. மருத்துவ பகுதி – பூ, விதை எண்ணெய் சுவை – இனிப்பு, துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு செயல் – காமம் பெருக்கி – APHRODISIAC வரட்சியகற்றி -- EMMOLLIENT துவர்ப்பி ------------- ASTRINGENT குணம் – பூ – இதன் பூ இருதயத்திற்கு வலுவைத்தரும். அலிசி விதை – மருத்துவ குணம் – இருமல், சாயம். நீறேரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, நீர்க்கோவை, சூதக சன்னி, தீப்புண், உள்தாபிதம், வாத வீக்கம்,கட்டிகள், கண் நோய், ஆகிய இவைகளை நீக்கும். அழிசி விதையை பொடித்து சுத்தமான நீரில் ஊறவைக்க குழ குழபாகும், அதை வடித்துச் பசியை எடுத்துக் ககிலிட கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல், மாறும். இப்பசையுடன் தேன் கலந்து கொடுக்க நீர்க் கோவை,இருமால், நீங்கும் மூத்திர எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை இவைகள் உள்பிரயோகத்தால் தேறும். இதையே நீர்த்தாரை, ஆசனவாயின...

அ -- வரிசை அருநெல்லி

Image
  அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் –   AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC          விதை – மலமிளக்கி – LAXATIVE          காய் – பித்தசமணி – ANTIBILIOUS   மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து   மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும்   மருத்துவர் பால் துரிசை மாற...

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை

Image
  அரிவாள் மூக்குப் பச்சிலை – ARUVAL MOOKKU PACHSILAI வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு தாவரவியல் பெயர் – SIDA RHOMBOIDEA – LINN இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும். மருத்துவ பகுதி – இலை சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .   செயல் -- குருதி பெருக்கடக்கி --- STYPTIC   குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும். பாடல் – வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும் துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும் அரிவாள் மூக்குப் பச்சிலை                                                         ...