அ - வரிசை அழிசி விதை





அலிசி விரை – ALISHI VIRAI


ஆங்கிலப் பெயர் – LINSEED – SEEDS OF

தாவரவியல் பெயர் – LINUM USITATISSIUM

குறிப்பு --- அலிசி விதையும் ஆளிவிதையும் ஒன்றென்று சிலர் கருதியுள்ளார்கள் இது தவறான கருத்து.

அலிசி இது இந்தியாவிலும், சிலோன், இமயமலை மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் பயிராகின்றது.

மருத்துவ பகுதி – பூ, விதை எண்ணெய்

சுவை – இனிப்பு, துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு

செயல் – காமம் பெருக்கி – APHRODISIAC

வரட்சியகற்றி -- EMMOLLIENT

துவர்ப்பி ------------- ASTRINGENT

குணம் – பூ – இதன் பூ இருதயத்திற்கு வலுவைத்தரும்.

அலிசி விதை – மருத்துவ குணம் –

இருமல், சாயம். நீறேரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, நீர்க்கோவை, சூதக சன்னி, தீப்புண், உள்தாபிதம், வாத வீக்கம்,கட்டிகள், கண் நோய், ஆகிய இவைகளை நீக்கும்.

அழிசி விதையை பொடித்து சுத்தமான நீரில் ஊறவைக்க குழ குழபாகும், அதை வடித்துச் பசியை எடுத்துக் ககிலிட கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல், மாறும்.

இப்பசையுடன் தேன் கலந்து கொடுக்க நீர்க் கோவை,இருமால், நீங்கும் மூத்திர எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை இவைகள் உள்பிரயோகத்தால் தேறும். இதையே நீர்த்தாரை, ஆசனவாயின் மூலமாகச் செலுத்த அவைகளைச் சம்பந்தப் பட்டுக் இளைக்கும், நோய்கள் தணியும்.குடிக்கக் கூடிய அளவு நீரில் இவ்விதியை பொடித்துக் கூட்டி இரவு முற்றும் வைத்திருந்து மறுநாள் காலையில் அதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சார் சேர்த்துக் குடித்துவர சயரோகத்தில் உண்டாகும் அழலை, வியர்வை தணியும்.

இதன் எண்ணெய்யை மேற் கூறிய நீருடன் கலந்து உட்கொண்டுவர ஷயரோகத்தின் சுவாசயத்தைப் பலப்படுத்தும்.

விதையை அரைத்துக் புற்கை செய்து கட்ட வாத வீக்கமும் குறையும் பழுக்காத கட்டிகள் பழுக்கும். உள் தாபிதங்கள் போகும்.

Comments

Popular posts from this blog

அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

அ - வரிசை அகத்திக்கீரை

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை