அந்திமல்லி என்ற அந்தி மந்தாரை

 

அந்திமல்லி – ANTHI MALLI

 




வேறுபெயர் –, பத்தராஷி

ஆங்கிலப் பெயர்FOUR “O “ CLOCK FLOWER

தாவரவியல் பெயர்MIRABIBIS  

       இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3 -4  மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ள தாயும் கண்கவரும் வகையிலும் இருக்கும்.

மருத்துவ பயன்இலை – கிழங்கு

இலை சுவைகைப்பு, வீரியம்வெப்பம், பிரிவு – கார்ப்பு

       செயல் – மலமிளக்கி ------- laxative

                உடலுரமாக்கி --- nutrient

இலை குணம் – கட்டிகளைப் பழுக்க வைக்க இதன் இலையை வதக்கி ஆமணக்கு நெய் தடவி கட்டிகள் மீது போடலாம். வெப்பத்தால் உண்டாகும் சொறி, சிரங்குகள் நீங்க இதன் இலை சாற்றை தடவலாம், காயங்களை ஆற்ற இலையை அரைத்து கட்டலாம்.

கிழங்கு – மலத்தை இலக்கித் தள்ள இதன் கிழங்கைத் தக்க அளவெடுத்துப் பால் விட்டரைத்துப் பாலிற் கலக்கி கொடுக்கலாம் பிளவைகள் குணப்பட இதை புற்கை செய்து உபயோகிக்லாம். நெய்விட்டு வருத்துன்ன உடல் பலக்கும்.அடிபட்ட உண்டான வீக்கங்களுக்கு கிழங்கை நீர் விட்டரைத்து பற்றுப் போடலாம்.  

Comments

Popular posts from this blog

அ - வரிசை அகத்திக்கீரை

அ -- வரிசை அரிவாள் மூக்குப் பச்சிலை