அ -- அவரிசை அக்ரோட்டு
அக்ரோட்டு – AKRO௧௨ TTU
Juglans Regia
English – Walnut
Telungu – Akrotu, Malayalam – Akrotu, Kannadam – Akrodu, Sanskirit –
Akshotas.
இது மரவகுப்பைச்
சேர்ந்தது.இமயமலையில் தன்னிச்சையாகப் விளைகிறது. காஷ்மீர், திபேத், ஆப்கானிஸ்தான்
இவ்விடங்களில் பயிரிடப்பட்டும் வருகிறது.
மருத்துவ உபயோகப்பகுதி – இலை, காய்,
பழம், பழத்தோல், பட்டை, விதை.
செயல்
உடல் தேற்றி – Alterative
துவர்ப்பி – Astringent
உரமாக்கி -- Tonic
இலை
ஒரு பங்கு இலைக்கு பன்னிரண்டு
பங்கு நீர்சேர்த்துக் காய்ச்சி நாலில் ஒன்றாகக் குறுக்கிக் கொடுக்க கண்டமாலை, எலும்புருக்கி,
வெள்ளை குசுமரோகம், குணப்படும்.
புண் புரைகளைக் கழுவ இக் கசாயத்தை
பயன்படுத்தலாம். அவைகள் ஆறும்.
காய்
செயல்
புழுவகற்றி – Vemifuge
மருத்துவகுணம் – குழந்தைகளின்
வயிற்றில் சேரும் பூச்சிகளைக் கொன்று வெளிப்படுத்த, கையைத் தின்ன கொடுக்கலாம்.
பழமும் – பருப்பும்
சுவை – பழம் – பருப்பு – இனிப்பு,
வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு
செயல்
உடல் தேற்றி – Alterative
காமம் பெருக்கி – Aphrodisiac
குணம் – உடலுக்கு பலந்தரும், இதை
உணவாகக் கொள்ளலாம்
பழத்தோல்
செயல்
மேகப்பிணி விளக்கி – Anti – Syphilitic
புளுவகற்றி – Vermifuge
தோலைக்கசாயமிட்டு உபயோகித்துவர மேக
நோய்கள் சாந்தமாகும். வயிற்றில் சேர்ந்துள்ள கீரிப்பூச்சிகளை வெளிப்படுத்தும்.
பட்டை
செயல்
துவர்ப்பி – Astringent
புழுக்கொல்லி – Anthelmintic
புண்ணழுக்கற்றி – Detergent
பால்சுருக்கி – Lactifuge
தொண்டைப்புண் ஆற்றும்,பால்சுரப்பை
தடுக்கும்,
மருத்துவ குணம் –
பால்சுரப்பைத் தடுக்க பட்டையைக்
கசாயம் சய்து கொடுத்து வரலாம், இதைக் கொப்புளித்து வர தொண்டைப்புண் ஆறும்.
விதை
இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
சிறிது மஞ்சள் அல்லது செம் மஞ்சள் நிறமிருக்கும். அளிசிவிதையின் மணம் போல் இது
அற்பமாய் இருக்கும்.
செயல்
பித்தநீர் பெருக்கி – Chologogue
மலமிளக்கி – Nild Laxative
குணம் – மலத்தில் உள்ள பெரும்
புழுவை போக்க இந்த எண்ணெய் உள்ளுக்குக் கொடுக்கலாம்’
கண்மறைப்புக்கு வெளிப்பிரயோகஞ்
செய்யலாம்.
தீபம் எரிக்கவும் உபயோகிக்கலாம்.
இதன் பிண்ணாக்கு மாடுகளுக்கு
கொடுத்துவரலாம்.
*******
(நாட்டு) அக்ரோட்டு பருப்பு
Aleurtis Triloba ( Belgaum)
English – fruit of Bengal walnut
Telungku – nattu – akrotu – vittu, Malayalam – natu akrotta vitha ,
Kannadam – natu akrodu, Sanskirit – Akrota
பொதுவாகத் தென்னிந்தியாவில்
சிறப்பாக வயநாட்டிலும், சிறப்பாக வயநாட்டிலும் பயிராகிறது.மரவகுப்பை சேந்தது.
மருத்துவ உபயோகப்பகுதி – பழம்,விதை,எண்ணெய்
செயல்
பருப்பு
காமம்பெருக்கி – Aphrodisiae
குளிர்ச்சியுண்டாக்கி – Cooling
எண்ணெய்
பெரும்மலம் போக்கி – Cathartic
குணம் – பேதியாகும்,பித்தநீரைப்
போக்கும், மூலவேதனையைத் தணிக்கும். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய்க்கு குமட்டல்
இல்லை, மணமும் இல்லை. தன்மையிருப்பதால் ஆமணக்கு எண்ணெயைப் பார்க்கிலும் சிறந்தது. 15 gm – 35 gm வரை கொடுக்கலாம். மலத்துடன் பித்தநீரை ஏராளமாய் வெளிப்படுத்தும்.
இந்த எண்ணெயை ஆசனவாயில் தடவிவர மூல
வீக்கம்,வேதனை குறையும்.
பழச்சாறு பூச்சிகளை கொல்லும்,
மூலத்தை போக்கும்.
The Vernacular names given to this plant in every book
which treats of it, are those properly belonging to Juglan regea ( walnut) and
to convert them into those of Aleuritis triloba (Belgaum walnut) it is
necessary the word country wild indian or belgaum, should be added to them.
தற்கால ஆய்வின் மூலம் தெரிய வந்தது
வாதுமைக் கொட்டை (Walnut) என்பது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும்.
பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுகின்றன. யக்லான்சு நைக்கிரா மரத்திலிருந்து பெறப்படுகின்ற கிழக்கத்திய கருப்பு வாதுமைக் கொட்டையானது
வர்த்தகரீதியாக மிகவும் குறைவாகவே கிடைக்கிறது.
இக்கொட்டையில் புரதச்சத்தும் கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளன
வாதுமைக்
கொட்டையானது, நன்கு
பழுத்த பின்பு உண்ணத் தகுந்த, ஒற்றை விதையினைக் கொண்ட வட்ட வடிவக் கொட்டையாகும்.
முற்றிலும் பழுத்தபின்பு வாதுமைப் பழத்தின் சுருக்கம் நிறைந்த மேல்புறத்தோல்
கழன்று, இருபிரிவுடைய
மேலோட்டுடன் வாதுமைக் கொட்டையானது வெளிப்படும். (முப்பிரிவுடைய மேலோடுகளும்
தோன்றுவதுண்டு). பழுக்கும் தருணங்களில் மேல் தோலானது உடைகின்ற தன்மையையும்
கொட்டையின் மேலோடானது கடினத்தன்மையையும் பெறுகின்றன. சதைப் பகுதியினை மூடியுள்ள
ஓடு இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஒட்டுடன் கூடிய
வாதுமைக் கொட்டையின் மீதுள்ள பழுப்புநிற தோல் ஆன்டியாக்சிடண்டுகளைக் கொண்டதாகும். இந்த ஆன்டியாக்சிடண்டுகள் எண்ணெய் மிகுந்த கொட்டையினை, சுற்றுப் புறத்திலுள்ள ஆக்ஸிஜனிடமிருந்து பாதுகாத்து கெட்டுப் போவதைத்
தடுக்கிறது.[1]
பொதுவாக
வாதுமை மரங்கள் வசந்தகாலத்தின் பாதியைக் கடந்து மிகவும் தாமதமாகவே தளிர்க்கின்றன.
இம்மரங்களின் அருகே போட்டியிட்டு வளரும் பிற தாவர வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு
இவை ஒருவகை வேதிப் பொருளை மண்ணுக்குள் சுரக்கின்றன. இதனால்தான்
மலர்த்தோட்டங்களையும் காய்கறித்தோட்டங்களையும் இம்மரங்களை ஒட்டி அமைப்பதில்லை.
வாதுமை
மரங்களில் பெர்சியன் அல்லது பிரித்தானிய வாதுமை மற்றும் கருப்பு வாதுமை
என இருபெரும் இனங்கள் உள்ளன. பிரித்தானிய வாதுமையானது பெர்சியாவில்
தோன்றிய இனமாகும். கருப்பு வாதுமையானது வடகிழக்கு அமெரிக்காவினை பூர்விகமாகக்
கொண்டதாகும். கருப்பு வாதுமைக் கொட்டை மிகவும் சுவையானது. ஆனாலும் இது பெற்றுள்ள
கடின ஓடு மற்றும் புறத்தோலின் தரமற்றத் தன்மை காரணமாக வணிகரீதியாக அதிகமாக
உற்பத்தி செய்யப்படவில்லை. பிரித்தானிய வாதுமையின் கலப்பினம் சார்ந்த
மரங்களையே பெரும்பாலான விவசாயிகள் வணிக நோக்கில் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.[2]
கலிபோர்னியா கருப்பு வாதுமை எனப்படும் யக்லான்சு கலிபோர்னிகா. யக்லான்சு சினேரியா, அரிசோனா வாதுமை எனப்படும் யக்லான்சு மேயர் ஆகியன வாதுமைக் கொட்டையின் இதர
வகைகளாகும்.
வாதுமைக்
கொட்டைகள் ஓடுடன் கூடியது மற்றும் ஓடில்லாத பருப்பு என இருவகைகளில் கிடைக்கின்றன.
இக்கொட்டைகள் சுவையூட்டப்பட்ட சிறு துண்டுகளாகவும் பிற உணவுப் பொருள்களுக்கான
மூலப் பொருளாகவும் பயன்படுகின்றன. அனைத்து வகைக் கொட்டைகளும் அப்படியே
சாப்பிடுவதற்கு ஏற்றவையாகும். மியூசிலி போன்ற உண்வுப் பொருளின் பகுதிப்
பொருளாகச் சேர்த்தும் உண்ணப்படுகின்றன. வாதுமை பானம், வாதுமை காபி, வாதுமை கேக்கு, வாதுமை ஊறுகாய் போன்ற
பொருள்களைத் தயாரிக்கவும் இக்கொட்டைகள் பயன்படுகின்றன.[7] பழுக்காத பச்சை வாதுமையை ஆல்கஹாலில் ஊற வைத்து நோசினோ என்னும் மதுபான வகை
தயாரிக்கப்படுகிறது.
வாதுமைக்கொட்டை
எண்ணெய் வணிகப்பயன்பாட்டுக்கு கிடைக்கின்றது, முக்கியமாக சாலட் தயாரிப்பில்
அலங்காரப் பொருளாக பயன்படுகிறது. இது குறைந்த புகைப்புள்ளியைக் கொண்டுள்ளதால்
வறுத்தலுக்குப் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.[8][9]
ஒடற்ற வாதுமைப் பருப்பானது 4% நீர், 15% புரதம், 65% கொழுப்பு, 14% கார்போவைதரேட்டு மற்றும் 7% நார்சத்தினைக் கொண்டுள்ளது (அட்டவணை). 100 கிராம் வாதுமைப் பருப்பு 2740 கிலோயூல்களையும் மாங்கனீசு முதலான மாழைகளும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து
காணப்படுகிறது. பொதுவாக சத்துக்களின் செறிவிலும்
தன்மையிலும் பிரித்தானிய வாதுமையும் கருப்பு வாதுமையும் சமமானவையாக இருந்தாலும்
பிரித்தானிய வாதுமையே அதிகமாக நுகரப்படுகின்றது.[10][11] ஒற்றை நிறைவுறாத கொழுப்பு அமிலங்களைக் (Monounsaturated Fat acid) கொண்டுள்ள பெரும்பாலான பிறக் கொட்டைகளைப்
போலன்றி, வாதுமைக் கொட்டையானது பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களைக் (Polyunsaturated
Fat acid)(மொத்தக் கொழுப்பில் 72%) கொண்டுள்ளது. இதில் அடங்கிய மொத்தக் கொழுப்பில் 13% ஓலிக்கு அமிலம் இருந்த போதிலும் 14% ஆல்பா லினோலெனிக்கு அமிலத்தையும் 58% லினோலீக்கு அமிலத்தையும் கொண்டுள்ளது.
|
வாதுமைக்
கொட்டையின் உட்கரு பாதிகளாக |
|
|
ஊட்ட மதிப்பீடு -
100 கிராம்கள் |
|
|
2,738 kJ
(654 kcal) |
|
|
13.71 |
|
|
0.06 |
|
|
2.61 |
|
|
6.7 |
|
|
65.21 |
|
|
6.126 |
|
|
8.933 |
|
|
47.174 |
|
|
புரதம் |
15.23 |
|
(0%) 1 μg (0%) 12 μg 9 μg |
|
|
20 IU |
|
|
(30%) 0.341 mg |
|
|
(13%) 0.15 mg |
|
|
(8%) 1.125 mg |
|
|
(11%) 0.570 mg |
|
|
(41%) 0.537 mg |
|
|
(25%) 98 μg |
|
|
(0%) 0 μg |
|
|
(2%) 1.3 mg |
|
|
(5%) 0.7 mg |
|
|
(3%) 2.7 μg |
|
|
(10%) 98 mg |
|
|
(22%) 2.91 mg |
|
|
(45%) 158 mg |
|
|
(163%) 3.414 mg |
|
|
(49%) 346 mg |
|
|
(9%) 441 mg |
|
|
(0%) 2 mg |
|
|
(33%) 3.09 mg |
|
Comments
Post a Comment