அ வரிசை அசோகு
அசோகு – ASOKA :---
இது நம் இந்திய மருத்துவத்தில் பயன்படும் பெண்களுக்கான
மருந்துகளில் ஒன்று இது ஆங்கிலத்தில் ASOKA TREE, என்றும்தாவர இயல் பொதுப் பெயராக - SARACA INDICA என்றும்
வழங்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கஞ்சம், விசாகப் பட்டினம், முதலிய
இடங்களிலும் தோட்டங்களிலும் வளர்க்கப் படுகிறது. சில இடங்களில் வீடுகளிலும்
வளர்க்கப்படுகிறது. இதன் பூ ஒரு பூங்கொத்து போலிருப்பதுடன், மனத்தைக் கவரும்
படியான நிறமுள்ளதாக இருக்கும். இது மாசி,பங்குனி மாதங்களில் புட்பிக்கும். இதை
தமிழகத்தில் பிண்டி,செயலை, என்றும் வழங்குவர். திருமுருகாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில்
பல இடங்களிலும் அசோகத்தின் செந்தளிர்கள் விவரிக்கப்பட்டுள்ளது. செந்தளிர் உடையதால்
செயலை என்று பெயர் பெற்றுள்ளது.
இது
அழகான பசுமையான இலைகளைக் கொண்ட சிறு மரம் இதன் இலைகள் இறகு வடிவககூட்டு இலை. ஒவ்வொரு
இலையும் நான்கு சிற்றிலைகளைக் கொண்டது. சிற்றிலைகள் நீள் சதுர ஈட்டி வடிவமானவை.
ஆறு முதல் ஒன்பது அங்குல நீளமுடையது. மலர்கள் கூட்டு சமதள மஞ்சரியாகக்
காணப்படுகிறது. நறுமணம் உடையது. புல்லிக் கிண்ணம் நீண்ட குழல் போன்றது அல்லிகள்
இல்லை அசோகப்பட்டை ஒரு சக்திவாய்ந்த துவர்ப்பி. (சூதக) மாதவிடாய் நோய்களில்
கருப்பாசய நோய்களிலும் அதிகமாகப் பயன்படுகிறது. இது ஒரு கருப்பை உரமாக்கி, கருப்பை
தாது வெப்பகற்றி (UTRINE SEDETIVE) , மற்றும் அதிசார நோய்களில் இதன் மலர்களை பயன்
படுத்தலாம் சர்க்கரை நோயாளிகள் மற்ற சர்க்கரைக்கான மூலிகைகளுடன் இதன் பட்டையை சேர்த்துப்
பயன் படுத்தலாம். இதன் பட்டையில் கேட்டக்கால் (CATEECOL) ட்டேன்னின்
(TANININ) போன்ற
சத்துக்கள் உண்டு. ஜப்பானின் எமசூகி என்பார் விலங்கினங்களில் தோன்றும் எஃரிலிச்
கார்சினோமா என்னும் புற்று நோய் வகையை தடுப்பதாக கண்டறிந்துள்ளார்.
சித்த மருத்துவத்தில் அறுசுவைக் குணங்களின்
அடிப்படையில் துவர்ப்பி செயலும், கார்ப்பு என்ற செயலும் கொண்டது. இதன்
அடிப்படையில் (ASTRINGENT)
துவர்ப்பியாக இரத்தத்தின் இலகியதன்மையை குறைத்து இரத்த வெளியேற்றத்தை
தடுக்கிறது. (SEDATIVE) தாது
வெப்பகற்றி என்னும் செயலின் மூலமாக கருப்பையின் தாதுக்களின் உஷ்ணத்தை
சமன் செய்கிறது. உரமாக்கி (TONIC)
என்னும் செயலின் மூலம் கருப்பையினை பலப்படுத்துகிறது. இதன் மேற்கண்ட செயல்களால்
பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவு சர்க்கரையை குறைக்க உதவுவதால் கருப்பை நோயில்
இரத்தத்தில் க்ளுக்கோஸ் நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாடு, சீத
ரத்தபேதி, பித்த பிணிகள் தீருகிறது. மற்றும் இதனுடன் இரும்பு சத்துக் சேர்த்து
ஆயுர்வேதம் சித்த மருத்துவத்தில் தரப்படுகிறது இதனால் இரத்தக் குறைபாட்டினால்
ஏற்படும் கர்ப்பாச நோய்கள் திரும் அசோகாதிவடி, அசோகாரிஸ்ட்டம் அசோகச் சூரணம்
மனப்பாகுகளில் இது மற்ற மருந்துகளுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனை
மருத்துவரின் ஆலோசனையின்படி உபயோகிப்பது நல்லது.
அசோகம் --- ASOKAM
வேறுபெயர் --- அசோகம்,
ஆயில், செயலை, பிண்டி, காகோளி
ஆங்கிலப் பெயர் --- ASOKA TREE
தாவரவியல் பெயர் ---- SARACA INDICA LINN
அசோகமரம் இந்தியாவில் மேற்கு மழைத் தொடர்ச்சியிலும் கஞ்சம், விசாகப்
பட்டணம், முதலிய இடங்களில் வளர்கின்றது. மற்ற இடங்களில் தோட்டங்களில் வைத்தும்
வளர்க்கப்படுகிறது. இதன் பூ ஒரு பூங்கோத்துப் போல் இருப்பதுடன் மனத்தைக் கவரும்
படியான பட்டு பூச்சு நிறமொற்ற செம்மை நிறமுள்ளதாய் இருக்கும், இது மாசி பங்குனி மாதங்களில் புஷ்பிக்கும்.
மருத்துவ பகுதிகள் – பூ – பட்டை
சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு.
செயல் – துவர்ப்பி – ASTRINGENT
கர்ப்பாசய வெப்பகற்றி – UTRERINE SEDETIVE
கருப்பாசய உரமாக்கி – UTRERINE TONIC
குணம் – கருப்பை
அழற்சி, கருப்பாசயத்திலிருந்து உண்டாகும் இரத்தப் பேருக்கு (பெரும் பாடு) இரத்த
பித்தம், இரத்த பேதி, பித்தப் பிணிகள், நீரிழிவு ஆகிய இவைகள் நீங்கும்.
குறிப்பு – உதிரவேங்கை
ஒடுவடக்கி, விடத்தலை, விளா, வேல் இவைகளின் குணம் அசோகுக்கு உண்டு.
பூவின் உபயோகம் – பூவை நுண்ணிய பொடி செய்து, கால் பலம் எடுத்து ஆழாக்கு நீருடன் கலந்து
கொடுக்க, இரத்த பேதி, இரத்தமும் சீதமும் கலந்த பேதி நிற்கும்.
பட்டையின் பலன் – பட்டையை இடித்துச் சாறு பிழிந்து கால் முதல் ஒரு உச்சிக் கரண்டியளவு
கொடுத்து வர பெரும்பாடு தணியும்.
பட்டை பலம் -3 எடுத்து சிதைத்து இரண்டு ஆழாக்கு பசுவின் பால் எட்டு ஆழாக்கு நீரில் கலந்து கொதிக்க வைத்து கசாயத்தை ஐந்தில் ஒரு பங்காக்கி நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று தரம் கொடுத்து வர பெரும்பாடு முதலிய இரத்தப் போக்கு நிற்கும்.கருப்பை தோடமுற்றால் வீட்டுக்கு விளக்கமான மூன்றாம் நாள் தொடங்கி இரத்தம் நிற்கும் நாள் வரை கொடுக்க கருப்பை தோடம் நீங்கிப் பலப்படும்.
Comments
Post a Comment